03-02-2026
Thiyagadurgam
Event

தியாகதுருகம் அரசு பள்ளியில் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் போதை எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட வைஸ் சேர்மன் இளையபெருமாள் ,மாவட்ட செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், உதவி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் டாக்டர் பொன்னரசு கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணம் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தடுப்பு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசியர் தனசெல்வன் நன்றி கூறினார்.




