11-02-2026
Kallakurichi
Welfare

தேதி: 11.02.2026 இடம்: கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம்
கள்ளக்குறிச்சியில் வசிக்கும் நம்ம சங்கரன் பிள்ளை போன்ற சாமானிய மக்களுக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரம் உயர்வது எப்போதுமே மகிழ்ச்சியான செய்திதான். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து ஒரு முக்கிய நலத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று (11.02.2026) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி (IRCS) சார்பில் அரசு மருத்துவமனைகளுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்த உபகரணங்களை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட தலைவரும், மாவட்ட ஆட்சியருமான திரு. எம்.எஸ். பிரசாந்த், இ.ஆ.ப (IAS) அவர்கள் அரசு மருத்துவர்களிடம் நேரில் வழங்கினார்.
.
மொத்தம் ₹2.25 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன:
1.) ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் (Oxygen Concentrators).
2.) பல்ஸ் ஆக்சிமீட்டர்கள் (Pulse Oximeters - இரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் கருவி).
இந்த நிகழ்ச்சியின் போது பேசிய மாவட்ட ஆட்சியர் திரு. எம்.எஸ். பிரசாந்த் அவர்கள், "இந்த நவீன கருவிகளை மருத்துவர்கள் உரிய முறையில் பயன்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க வேண்டும்," என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்டத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் ரெட் கிராஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்:
மரு. சுபதர்ஷினி, இ.ஆ.ப - உதவி ஆட்சியர் (பயிற்சி).
மரு. எஸ். பொன்னரசு - சேர்மன், IRCS கள்ளக்குறிச்சி.
திரு. ஏ. இளையபெமாள் - இணை சேர்மன்.
திரு. இ. இமானுவேல் சசிக்குமார் - செயலாளர்.
திரு. எம். சுரேஷ்குமார் - பொருளாளர்.
திரு. மாயக்கண்ணன் - மாநில செயற்குழு உறுப்பினர்.
மேலும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் திரு. துரை, திரு. ஆனந்தபாபு, திருமதி. கனிமொழி மற்றும் திருமதி. ஆனந்தி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













