28-06-2026
Kallakurichi
Event

இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கோலப் போட்டி
.
கள்ளக்குறிச்சி, ஜூன் 28:
.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி, கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை சார்பில் பெண்களுக்கான போதைப்பொருள் விழிப்புணர்வு கோலப் போட்டி கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலக வளாகம், கச்சிராப்பாளையம் சாலையில் நடைபெற்றது.
.
நிகழ்ச்சிக்கு இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் டாக்டர் பொன்னரசு தலைமை தாங்கி போட்டியைத் தொடங்கி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் திரு. வை. இளையபெருமாள், மாவட்ட செயலாளர் திரு. இம்மானுவேல் சசிகுமார், மாவட்ட பொருளாளர் திரு. சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, “போதை மரணத்தின் பாதை… விழிப்புணர்வு வாழ்வின் பாதை!” என்ற கருத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.
.
அரியபெருமான், சிறுவங்கூர், ரங்கநாதபுரம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கனியாமூர், ராமராஜபுரம், பொன்பரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்டு கருத்துமிக்க கோலங்களை வரைந்தனர்.
.
போட்டிக்கான நடுவர்களாக திரு. ஜானகிராமன், மகப்பேறு மருத்துவர் டாக்டர் நவீனா DGO.,DNB(OG)
திருமதி. குறிஞ்சி அமுதன், திருமதி ஆதிலட்சுமி கருதப்பிள்ளை மற்றும் திருமதி ஜோதி ஆகியோர் செயல்பட்டனர்.
.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
.
இந்நிகழ்ச்சியை இந்திய ரெட் கிராஸ் சொசைட்டி (IRCS), கள்ளக்குறிச்சி மாவட்ட கிளை சார்பில் திருமதி கனிமொழி, திருமதி ஆனந்தி மற்றும் திருமதி கிருஷ்ணவேணி ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினர்.
.










