06-02-2026
Indili
Event

வணக்கம்!!!
இந்திலி R.K சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (6.2.2026) இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாக அலுவலர் மோகனசுந்தரம் துணை முதல்வர் ஜான் விக்டர் , புல முதல்வர் அசோக் யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணப்பாளராக சுரேந்திரன் மற்றும் ஆசிரியர் கல்லூரி அலுவலர் மேகலை உள்லிட்ட பலர் கலந்து கொண்டனர் . மேலும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட வைஸ் சேர்மன் இளையபெருமாள் , மாவட்ட செயலாளர் இம்மானுவேல், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், இந்தியன் ரெட் கிராஸ் உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சேர்மன் டாக்டர் பொன்னரசு கலந்து கொண்டு போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதற்கான காரணம் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் தடுப்பு குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பள்ளி ஆசிரியர்கள், போதைப்பொருள் எதிர்ப்பு குழு மற்றும் யூத் ரெட் கிராஸ் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழச்சியில் திடீர் என செயலிழந்த இதயத்தை செயல்பட வைக்கும் CPR ( Cardio pulmonary resusitation) செய்முறை பயிற்சியும் வழங்க பட்டது.












