17-05-2026
Kallakurichi
Event

கல்லை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பிலும் ஸ்கார்லட் பவுண்டேஷன் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கிளையும் இணைந்து உலக உயர் ரத்த அழுத்த தினத்தில் (மே-17) கள்ளக்குறிச்சி மாவட்டம் பொது மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடத்தப்பட்டது.
.
இப்பேரணி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எம்.எஸ்.பிரசாந்த் ஐ ஏ எஸ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லை மெடிகல் சென்டர் மருத்துவர்கள் நவீனா,சதா வெங்கடேஷ், சாய் கிளினிக் மருத்துவர் அருள் பாண்டியன், சுவேதா ,காவியா , ஸ்கார்லட் பவுண்டேஷன் நிர்வாகிகள் பிரபு,மணி,விஜய் இ-சேவை மையம் நிறுவனர் விஜய், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் செயர்குழு உறுப்பினர் மணிபாரதி, கே எஸ் கே சட்ட ஆலோசனை மைய தலைவர் சுரேஷ்,டி ஐ பி கேட்டரிங் மற்றும் பிளாக் பிக்கோ உரிமையாளர் அருண் குமார்,
.
கள்ளக்குறிச்சி நியூஸ் வார இதழின் ஆசிரியர் டிஜி கார்த்திக்,வெற்றி டிஜிட்டல் உரிமையாளர் தமிழ்ச்செல்வன், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி பதிவாளர் விக்னேஷ்,இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி வைஸ் சேர்மன் இளையபெருமாள்,செயலாளர் சசிகுமார், பொருளாளர் சுரேஷ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் மாயக்கண்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆனந்தபாபு, கனிமொழி, துரை யூத் ரெட் ரோஸ் யூனிட் செயலாளர் முகமது யாசின் , ஆர் கே எஸ் கல்லூரி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம், ஸ்டார் பிளாஸ்டிக் நிறுவனர் ஷான்முகிபுல்லா, உதயா குடும்ப குழும தலைவர் தேன் உடைய ராஜ் உதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.









