23-12-2025
Kallakurichi
Blood Donation

1. கள்ளக்குறிச்சி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் டாக்டர் ஆர்.கே. சண்முகம் கல்லூரி இணைந்து நடத்திய ரத்ததான முகாம்.
2. 55 யூத் ரெட் கிராஸ் (YRC) மாணவர்கள் தன்னார்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.
3. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர் ரத்த சேகரிப்பை மேற்கொண்டனர்.
4. ரத்ததானம் செய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி , இந்திலி டாக்டர் ஆர் கே சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேலூர் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமினை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் பொன்னரசு,வைஸ் சேர்மன் இளையபெருமாள், செயலாளர் சசிகுமார் இம்மானுவேல் , பொருளாளர் சுரேஷ் குமார், மாநில செயற்குழு மாயகண்ணன் முன்னிலையில்.
இரத்ததான முகாமினை கல்லூரியின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குருதி வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார் தலைமையிலான மருத்துவ குழு வருகை புரிந்து கல்லூரியில் பயிலும் 55 யூத் ரெட் கிராஸ் தன்னார்வா மாணவர்களிடமிருந்து ரத்ததானம் பெற்றனர்.
கல்லூரி நிர்வாக அலுவலர் கு மோகனசுந்தர் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழைகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்த ரத்ததான முகாம் ஏற்பாடுகளை கல்லூரியில் ஒய்.ஆர்.சி மற்றும் ஆர்.ஆர். சி ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி மருத்துவ அலுவலர் சுரேஷ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி சுகாதார ஆய்வாளர் கௌதம் ஆகியோர் மேற் கொண்டனர்.






